ஆனைமலை ஒன்றிய அதிமுக செயலாளர் அப்புசாமி, மதுரை மாமன்ற உறுப்பினர் முத்துராஜா மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

ஆனைமலை ஒன்றிய அதிமுக செயலாளர் அப்புசாமி, மதுரை மாமன்ற உறுப்பினர் முத்துராஜா மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

சனி, மார்ச் 26,2016,

ஆனைமலை ஒன்றிய அதிமுக செயலாளர் அப்புசாமி, மதுரை மாநகர் மாமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு:

கோவை புறநகர் மாவட்டம் ஆனைமலை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எம்.அப்புசாமி, உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்திக்கேட்டும்மதுரை மாநகர் மாவட்டம்,.மதுரை வடக்கு 2 ஆம் பகுதி 7 வது வட்டக்கழக செயலாளரும் மாநகராட்சி மன்ற உறுப்பினருமான முத்துராஜா அகால மரணமடைந்து விட்டார். என்ற செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றேன்.

பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி மரணமடைந்த ஆரம்ப கால அதிமுக உடன்பிறப்பு அப்புசாமி, மற்றும் முத்துராஜா ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திகிறேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.