ஆர்.கே. நகரில் வெற்றி பெறுவேன் : “எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ பொருளாளர் தீபா பேட்டி

ஆர்.கே. நகரில் வெற்றி பெறுவேன் : “எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ பொருளாளர் தீபா பேட்டி

சனிக்கிழமை, மார்ச் 11, 2017,

சென்னை : சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவேன் என “எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ பொருளாளர் தீபா நம்பிக்கை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர்,நேற்று தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-உண்மையான அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் சசிகலாவை ஏற்கவில்லை. அதனால் எனக்கு அவர்களின் ஆதரவு தேவையில்லை. இதுவரையில் திமுக உள்ளிட்ட கட்சிகளை எதிர்ப்பதற்காக இதுவரையில் எந்த வியூகமும் வகுக்கவில்லை.
ஆர்.கே. நகர் தொகுதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோட்டையாகும். அங்கு வேறு யாருக்கும் இடம் கிடையாது என்பதால், ஜெயலலிதாவின் வாரிசாக பொதுமக்கள் என்னை தேர்வு செய்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

கட்சி நிர்வாகிகள் பட்டியலையும், கட்சியின் சின்னம் பற்றியும் விரைவில் அறிவிப்பேன். இதுகுறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தீபா தெரிவித்தார்.

இதனிடையே, ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாக தீபா அறிவித்துள்ளதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்குச் சேகரிப்பை தொடங்கியுள்ளனர்.