ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் ; டி.டி.வி. தினகரன் பேட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்  ; டி.டி.வி. தினகரன் பேட்டி

வெள்ளிக்கிழமை, மார்ச் 10, 2017,

சென்னை : ஆர்கேநகர் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிதியளிப்பு விழா நேற்று நடந்தது. அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.எ.க்கள், எம்.பி.கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் டி.டி.வி. தினகரன் கூறியதாவது:-
ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி தற்போது வெளியாகி உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று கட்சி தலைமை ஆலோசித்து பின்னர் அறிவிக்கும்.அ.தி.மு.க.வின் தேர்தல் எதிரி தி.மு.க. தான். தி.மு.க.வை எதிர்த்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் தேர்தல் பிரசாரங்களை பொதுமக்கள் நம்பமாட்டார்கள். மக்களின் ஆதரவு முழுமையாக அ.தி.மு.க.விற்கு தான் உள்ளது.இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்