ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் : தீபா அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் : தீபா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, மார்ச் 10, 2017,

சென்னை : ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தான் போட்டியிடப் போவதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை நேற்று மாலை சந்தித்த தீபா கூறியதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். வெற்றியும் பெறுவேன். மக்கள் எனக்கு ஆதரவளித்து வெற்றி பெற வைப்பார்கள் என நம்புகிறேன். நான் இதுவரை யாரிடமும் ஆதரவு கேட்கவில்லை. திமுக, சசிகலா குடும்பத்தினர் தவிர யார் ஆதரவு அளித்தாலும் ஏற்பேன். சசிகலா குடும்பத்தினர் போட்டியிட்டால் டெபாசிட் இழப்பது உறுதி. நான் அரசியல் ஆதாயத்திற்காக ஜெயலலிதா மரணம் குறித்துப் பேசவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.இவ்வாறு தீபா கூறினார்.