ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தட்சணமாற நாடார் சங்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தட்சணமாற நாடார் சங்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

திங்கள், மார்ச் 20, 2017,

சென்னை : ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தட்சணமாற நாடார் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. வேட்பாளர் டி.டி.வி.தினகரனை சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.

இது குறித்து ,அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

தட்சணமாற நாடார் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.சபாபதி தலைமையில், அச்சங்கத்தின் செயலாளர் ஆர்.சண்முகவேல், இயக்குனர்கள் வி.எஸ்.கணேசன், வி.எஸ்.டி.பி.ராமர், ஆர்.தினகரன், சவுந்தராஜன், வி.எஸ்.வேல் ஆதித்தன், வி.தங்கவேல், வி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதேபோல், இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் நேற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை சேர்ந்த தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளர் என்.மகேஷ் என்ற மகேஷ்வரன், மதுரை மாவட்ட பொறுப்பாளர் டி.ஜஸ்டஸ் ராஜா, புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் ஏ.சி.எம்.மருதுபாண்டியன், நீலகிரி மாவட்ட துணை பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவசுப்ரமணியன், தஞ்சாவூர் மாவட்ட துணை பொறுப்பாளர் பி.பிரபு, பாபநாசம் ஒன்றிய பொறுப்பாளர் எம்.ஜாசகான் ஆகியோர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.இந்த நிகழ்வின்போது, முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, தாம்பரம் நகர முன்னாள் செயலாளர் ம.கரிகாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும்,பசும்பொன் மக்கள் கழகமும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.

ஆதரவு தெரிவித்தவர்களுக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.  இவ்வாறு அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.