ஆளுநர் ரோசய்யாவுடன் முதலமைச்சர் ஜெயலலிதா சந்திப்பு :ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

ஆளுநர் ரோசய்யாவுடன் முதலமைச்சர் ஜெயலலிதா சந்திப்பு :ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

சனி, மே 21,2016,

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார்.

தமிழகத்தில் கடந்த மே 16 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து அதிமுக சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா  கட்சியின் பேரவைக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் ஆளுநரைச் சந்தித்த ஜெயலலிதா, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். மேலும், அதிமுக உறுப்பினர்கள் தன்னை தலைவராக தேர்ந்தெடுத்தற்கான கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் வழங்கினார்.