ஆவின் நிறுவனத்தின் சார்பில், சென்னை விருகம்பாக்கத்தில் 1 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

ஆவின் நிறுவனத்தின் சார்பில், சென்னை விருகம்பாக்கத்தில் 1 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

ஆவின் நிறுவனத்தின் சார்பில், சென்னை விருகம்பாக்கத்தில் 1 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், சேலம் பால் பண்ணையில் 14 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள உயர் வெப்ப பதப்படுத்துதல் மூலம் பாலை பதப்படுத்தும் இயந்திரம் மற்றும் 200 மில்லி லிட்டர் பாக்கெட் பால் நிரப்பும் இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாட்டினை துவக்கி வைத்து, 5 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டுள்ள 25 புதிய வெப்பம் தடைசெய்யப்பட்ட பால் டேங்கர் வாகனங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.

பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு, ஆவின் நிறுவனத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் 409 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியும், 2015-2016 ஆம் நிதியாண்டிற்கு 208 கோடியே 93 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு, பால்வளத் திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம், தமிழகத்தில் இரண்டாம் வெண்மைப் புரட்சி ஏற்பட்டு ஆவின் பால் கொள்முதல் நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் என்ற சரித்திர சாதனையைப் படைத்துள்ளது.

பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் அதிகப்படியான பாலை கொள்முதல் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் ஆவின் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது. அதேசமயம், தற்பொழுது நிலவி வரும் போட்டிச்சந்தை சூழலில் பால் மற்றும் பால்பொருட்களை விற்பனை செய்ய நுகர்வோர்களைக் கவரும் வகையில், ஆவின் நிறுவனம் தனியாருக்கு இணையாக பல்வேறு வியாபார யுத்திகளைக் கையாண்டு வருகிறது. அந்த வகையில், சென்னை விருகம்பாக்கத்தில் ஆவின் நிறுவனம் 1 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 22 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பளவில், ஆயிரத்து 850 சதுர அடி கட்டட பரப்பளவில், குளிர்பதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

((Breath))இந்த புதிய பாலகம், ஒரே சமயத்தில் 50 நபர்கள் அமர்ந்து சாப்பிட வசதியுடன், நுகர்வோர் பார்த்து ரசிக்க பெரிய அளவு தொலைக்காட்சிப் பெட்டி, கட்டணமில்லா Wi-fi வசதி, குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு நடைபாதை வசதி, 50 கார்கள் மற்றும் 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வாகனம் நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலகத்தில், வெண்ணெய், நெய், பால்பவுடர், பாதாம் மிக்ஸ் பவுடர், பால்கோவா, மைசூர்பா, குலோப் ஜாமூன் ஆகிய பால்பொருட்கள், 18 வகையான ஐஸ்கிரீம்கள், பீசா, பர்கர், சான்ட்விச், பிரஞ்ச்பிரை மற்றும் கட்லட் ஆகியவைகள் விற்பனை செய்ய தனியாக கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சேலம் பால்பண்ணையில், 14 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள Ultra High Temperature Plant எனப்படும் உயர் வெப்ப பதப்படுத்துதல் மூலம் பாலை பதப்படுத்தும் இயந்திரம் மற்றும் 200 மில்லி லிட்டர் பாக்கெட் பால் நிரப்பும் இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாட்டினை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

இப்புதிய பேக்கிங் இயந்திரம் ஒருமணி நேரத்திற்கு 7 ஆயிரத்து 500 டெட்ரா பாக்கெட்டுகள் செய்யும் திறன் படைத்தது. இந்த இயந்திரத்தின் மூலம் ஏலக்காய், பிஸ்தா, அன்னாசி, ஸ்ட்ராபரி ஆகிய நான்கு வகையான சுவைகளில் ஆவின் நறுமணப்பால் சாக்லேட், மேங்கோ, வெண்ணிலா, மால்ட் வெண்ணிலா, ஆரஞ்ச் வெண்ணிலா, ஆப்பிள், பனானா, கேரட், பாதாம் ஆகிய 9 வகையான சுவைகளில், மில்க்ஷேக், மாம்பழச்சாறு மற்றும் மோர் ஆகியவை டெட்ராபேக்கில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். இங்கு தயாரிக்கப்படும் டெட்ரா பொருட்களுக்கு வெளிநாடுகளில் விற்பனை செய்யும் வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் ஆவின் டெட்ரா பாக்கெட் பால் விற்பனைக்கு அதிக வாய்ப்பு உள்ளது.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், நாளொன்றுக்கு 11 லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் பாலை சென்னை மாநகரில் விற்பனை செய்து வருகிறது.

இணையத்திற்குத் தேவையான பால், மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களிலிருந்து வெப்பம் தடை செய்யப்பட்ட பால் டேங்கர் வாகனங்களில் கொண்டு வரப்படுகிறது. தனியாருக்குச் சொந்தமான பெரும்பாலான பால் டேங்கர்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்கு பால் கொண்டு வரப்படுகிறது.

தற்பொழுது, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்கு சொந்தமாக நாளொன்றுக்கு சுமார் 2 லட்சம் லிட்டர் பால் கொண்டு வரும் அளவிற்கே பால் டேங்கர் வாகனங்கள் உள்ளன. மாவட்டங்களிலிருந்து பால் கொண்டு வருவதற்கு தனியார் பால் டேங்கர்களை மட்டுமே நம்பியிருப்பதை தவிர்க்கும் பொருட்டு, 61 புதிய பால் டேங்கர் வாகனங்கள் 15 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி, முதற்கட்டமாக 5 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டுள்ள 25 புதிய வெப்பம் தடைசெய்யப்பட்ட பால் டேங்கர் வாகனங்களை வழங்கும் அடையாளமாக 5 ஓட்டுநர்களுக்கு பால் டேங்கர் வாகனங்களின் சாவிகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வழங்கினார்.

இப்புதிய பால் டேங்கர்களின் மூலம், கூடுதலாக நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால், மாவட்ட ஒன்றியங்களிலிருந்து கொண்டுவர இயலும். இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. T.K.M. சின்னையா, பால்வளத் துறை அமைச்சர் திரு B.V. ரமணா, தலைமைச் செயலாளர் திரு கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் தலைவர் திரு அ. மில்லர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், பால்வளத் துறை ஆணையர் திரு சுனீல் பாலீவால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.