பொது மக்களுக்கு,ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை

பொது மக்களுக்கு,ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை

சனி, டிசம்பர் 05,2015,

சென்னை,

சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. பல இடங்களில் பால் கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக சென்னை மாநகர மற்றும் புறநகர பகுதிகளை சார்ந்த பொது மக்கள், 9840387510, 9840907494, 9443944908 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களுக்கு,ஆவின் பால் தடையின்றி கிடைக்கும்.