இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளது:அமைச்சர் மோகன் தகவல்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளது:அமைச்சர் மோகன் தகவல்

புதன், பெப்ரவரி 17,2016,

இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளதாக, ஊரக தொழில் துறை அமைச்சர் மோகன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதன் பின்னர், இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.

பின்னர், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் முத்துசெல்வியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மோகன், இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளதாகவும், 2011ம் ஆண்டுக்கு பிறகு 23 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள்  தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கல்வி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளதாக தெரிவித்தார். மேலும் அதிமுக அரசு பொறுப்பேற்ற பின் 39 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பழனியப்பன் கூறினார்.