இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பொன்னுபாண்டி,மதிமுக எம்எல்ஏ வரதராஜன்,கக்கனின் மகள் பூமாலை காசி விஸ்வநாதன் மற்றும் பலர் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பொன்னுபாண்டி,மதிமுக எம்எல்ஏ வரதராஜன்,கக்கனின் மகள் பூமாலை காசி விஸ்வநாதன் மற்றும் பலர்  முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

சென்னை தீவுத்திடலில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் இறுதியில் மக்கள் நலக்கூட்டணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ-வும் விருதுநகர் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளருமான பொன்னுபாண்டி அதிமுகவில் சேர்ந்தார். அவரோடு விருதுநகர் முன்னாள் மதிமுக எம்எல்ஏ வரதராஜன், முன்னாள் அமைச்சர் கக்கனின் மகள் பூமாலை காசி விஸ்வநாதன், முன்னாள் எம்.பி. கலாநிதி, மன்னார்குடி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஞானசுந்தரம் மற்றும் இசையமைப்பாளர் செளந்தர்யன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.