சிறுபான்மை மக்களுக்கு அரணாக விளங்கும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு:இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் பஷீர் அகமது பேட்டி

சிறுபான்மை மக்களுக்கு அரணாக விளங்கும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு:இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் பஷீர் அகமது பேட்டி

வியாழன் , பெப்ரவரி 04,2016,

இந்திய தேசிய லீக்கின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் பஷீர் அகமது தலைமை தாங்கினார். தேசிய தலைவர் முகமது சுலைமான் முன்னிலை வகித்தார். தேசிய துணை தலைவர்கள் செய்யது அப்துல் ரஹ்மான் மில்லி, ஜாபர் இக்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு பின்னர், மாநில தலைவர் பஷீர் அகமது நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் சிறுபான்மை மக்களுக்கு அரணாக விளங்கும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதோடு, உரிய வகையிலும், எண்ணிக்கையிலும் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதிகள் பெற்று போட்டியிட இருக்கிறோம்.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தனித்த இடஒதுக்கீடு 3.5 சதவீதத்தை 7 சதவீதமாக அதிகரித்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளப்பேரிடர் நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு காட்டும் சுணக்கம் ஏற்புடையதல்ல. அவதிக்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்துக்கு தமிழக அரசு கோரியுள்ள நிவாரண தொகையை உடனே மத்திய அரசு வழங்கிட வேண்டும்.இவ்வாறு பஷீர் அகமது கூறினார்.