இன்று 71-வது சுதந்திர தினவிழா : கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றுகிறார்

இன்று 71-வது சுதந்திர தினவிழா : கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றுகிறார்

ஆகஸ்ட் 15 , 2017 ,செவ்வாய்க்கிழமை,

சென்னை : 71-வது சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றுகிறார்.

நாடு முழுவதும் 71-வது சுதந்திரதினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை தலைமை அலுவலகத்தில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடற்கரை காமராசர் சாலையில் கோட்டைக்கு கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை 8.30 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதைத்தொடர்ந்து மாணவர்கள், காவல்துறையினரின் கண்கவர் அணிவகுப்புகள் நடைபெறுகின்றன. அதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

இதையடுத்து காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி மற்றும் முதலமைச்சரின் காவல்துறை பதக்கங்கள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு காவல்துறையினருக்கான ஜனாதிபதி மற்றும் முதலமைச்சருக்கான பதக்கங்களை வழங்குகிறார். சுதந்திரதின விழாவையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று மாலை நடைபெறும் தேநீர் விருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.