இரண்டாயிரம் பேருடன் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி

இரண்டாயிரம் பேருடன் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்தார்  முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி

ஜூன் 09, 2017,வெள்ளி கிழமை,

சென்னை : சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் இன்று முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அ.திமு.க புரட்சி தலைவி அம்மா அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியின் தொடக்கத்தில் முன்னணி அமைச்சராக வலம் வந்தவர் பரஞ்ஜோதி. திருச்சி மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூகத்தைச் சேர்ந்த இவர், முதலில் ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் நேருவை தோற்கடித்த பரஞ்ஜோதிக்கு 7 துறைகள் வழங்கினார் ஜெயலலிதா. மருத்துவர் ராணி கொடுத்த புகாரால் அனைத்து பதவிகளையும் இழந்தார். செல்வாக்கு மிக்க  அமைச்சராக வலம் வந்த இவர்,இன்று .2 ஆயிரம் பேருடன் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவரது அணியில் தன்னை இணைத்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன் எம்.பி., மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.