இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 7 மீனவர்களையும் விடுவிக்க முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 7 மீனவர்களையும் விடுவிக்க முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்

புதன், ஜூன் 1,2016, 

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 7 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வரின் கடித விவரம்:

மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாக் நீரிணையில் இந்திய மீனவர்களுக்கான பராம்பரிய மீன்பிடிக்கும் உரிமை இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் விடுவிக்கப்படும் நேரத்தில், அவர்களுக்கு சொந்தமான படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் திரும்ப வழங்கப்படுவதில்லை.

எனவே, மத்திய அரசு குறிப்பாக பிரதமர் மோடி இதில் தலையிட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ள 7 மீனவர்களையும், இலங்கை வசம் உள்ள 89 மீன்பிடி படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.