இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மீனவக்குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றி

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பத்தினருக்கு  நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  மீனவக்குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றி

ஞாயிறு, பெப்ரவரி 07,2016,

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், நிதி உதவிகள் வழங்கப்பட்டன. தங்களின் குடும்ப வறுமையை போக்க நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு மீனவக்குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள நாகை மாவட்ட மீனவர்களின் குடும்பத்தினர், அன்றாட செலவினங்களை சமாளிக்கும் வகையில் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட மீனவர்கள் 34 பேரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் திரு. கே.ஏ.ஜெயபால், 2 லட்சம் ரூபாய் அளவுக்கு நிதியுதவியை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர். நிதியுதவி பெற்றுக்கொண்ட மீனவக் குடும்பத்தினர் முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

மதுரையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்ட 196 பயனாளிகளுக்கு அமைச்சர் திரு.செல்லூர்.கே.ராஜீ, கடனுதவிகளை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் மணல்மேல்குடி வட்டாரங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 342 விவசாயிகளுக்கு ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மான்ய கடனுதவிகளை அமைச்சர் திரு. என்.சுப்பிரமணியன் வழங்கினர். தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா வினா விடை புத்தகங்களும் வழங்கப்பட்டன. இதில், கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அன்வர் ராஜா மற்றும் சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.