இஸ்லாமியப் பெருமக்களுக்கு முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ரம்ஜான் வாழ்த்து

இஸ்லாமியப் பெருமக்களுக்கு முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ரம்ஜான் வாழ்த்து

ஜூன் ,26 ,2017 ,திங்கட்கிழமை,  

சென்னை : ரம்ஜான் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்- அமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தூய்மை உணர்வோடு ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, ஏழை- எளியோருக்கு உணவளித்து, உதவிகள் அளித்து, எல்லோரும் இன்புற்று வாழ இறைவனைத்தொழுது, இஸ்லாமியப்பெருமக்கள் கொண்டாடி மகிழும் திருநாள் தான் ரம்ஜான் பண்டிகை அனைவரிடத்திலும், அன்பு செலுத்தவும், சகோதரத் துவத்துடன் வாழ்ந்திடவும் வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பொங்கிடவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டி ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.