இஸ்லாமியப் பெருமக்களுக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து

இஸ்லாமியப் பெருமக்களுக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து

ஜூன் ,26 ,2017 ,திங்கட்கிழமை,  

சென்னை : ரம்ஜான் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், முகமதுநபிக்கு குரான் அருளப்பட்டதை கொண்டாடும் இணையில்லா திருநாள் ரம்ஜான் என கூறியுள்ளார். உலகம் முழுவதும் அன்பு, அமைதி, சமாதானம் நிலைக்க வேண்டும் என தெரிவித்துள்ள டிடிவி தினகரன், பொதுச்செயலாளர் சசிகலா சார்பிலும் ரம்ஜான் வாழ்த்துகளை கூறிக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.