ஈரோடு மாவட்டத்தில், தாமரைக்கரை – மணியாச்சி பள்ளம் ஓடையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மலைவாழ் மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

ஈரோடு மாவட்டத்தில், தாமரைக்கரை – மணியாச்சி பள்ளம் ஓடையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மலைவாழ் மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

செவ்வாய், மார்ச் 08,2016,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில், தாமரைக்கரை – மணியாச்சி பள்ளம் ஓடையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தால் மலைவாழ் மக்கள் மிகுந்த பயனடைந்துள்ளனர். இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரத்து 100 மீட்டர் உயரமுடையது. இந்த மலைப்பகுதியில் தாமரைக்கரை – மணியாச்சி பள்ளம் என்ற ஓடை உள்ளது. இந்த ஓடையில் மழைக்காலங்களில் நீர்பெருக்கெடுத்து ஓடும் என்பதால், 35-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் ஓசூர் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லவேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில், தாமரைக்கரை – மணியாச்சி பள்ளம் ஓடையில் 2 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, பாலம் கட்டி முடிக்கப்பட்டு அண்மையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அதனை திறந்து வைத்தார்.

இந்த புதிய பாலம் திறக்கப்பட்டதையடுத்து, மலைவாழ் கிராம விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்களது விளைபொருட்களை கொண்டு செல்லவும், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் மிகுந்த பயனுடையதாக பாலம் அமைந்துள்ளது என மலை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அவர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.