ஈரோடு மாவட்டத்தில் ,முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் நெசவாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன

ஈரோடு மாவட்டத்தில் ,முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் நெசவாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன

செவ்வாய், டிசம்பர் 22,2015,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஈரோடு மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கான சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. வீடுகளைப் பெற்றுக் கொண்ட கைத்தறி நெசவாளர்கள் முதலமைச்சருக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.

கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை மேம்பட விலையில்லா மின்சார நூல் சுற்றும் இயந்திரம், நெசவாளர் கடன் அட்டை, மருத்துவக்காப்பீட்டு அட்டை, முதியோர் ஓய்வூதியம் என எண்ணற்ற செயல் திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். இதில் மேலும் ஒரு உன்னத திட்டமான சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக நெசவுத் தொழில் உள்ளது. இங்கு கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடுகட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதனையடுத்து, 2 ஆயிரத்து 500 கைத்தறி நெசவாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 2 புள்ளி 60 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு, தற்போது அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயனாளிகள் கைத்தறிகளை வீட்டிலேயே அமைத்து நெய்து வருகின்றனர். முதலமைச்சர்ஜெயலலிதா நெசவாளர்களுக்கு அதிக கவனம் செலுத்தி, அதிக திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கைத்தறி நெசவாளர்களின் வீடுகட்டும் கனவை நனவாக்கிய முதலமைச்சருக்கு அவர்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்