ஈரோடு வேலைவாய்ப்பு முகாமில் 6,800 பேருக்கு பணிநியமன ஆணைகள்:முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பயனாளிகள் நன்றி!

ஈரோடு வேலைவாய்ப்பு முகாமில் 6,800 பேருக்கு பணிநியமன ஆணைகள்:முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பயனாளிகள்  நன்றி!

திங்கள், பெப்ரவரி 22,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, ஈரோடு புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில், பெருந்துறையில் நேற்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 6 ஆயிரத்து 800 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தங்களது வாழ்வாதாரத்திற்கு உதவி புரிந்த முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு, பணிநியமன ஆணைகளை பெற்றவர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை, அ.இ.அ.தி.மு.க.வினர் எளிமையான முறையிலும், ஏழை-எளிய மக்கள் பயனடையும் வகையிலும் பல்வேறு உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் பெருந்துறையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் ஈரோடு, திருப்பூர், காங்கேயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், இளம்பெண்கள் கலந்துகொண்டனர். 

ஹோண்டா, எல்.அண்டு.டி., எல்.ஜி உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வேண்டி விண்ணப்பித்துள்ள இளைஞர்களை தேர்வு செய்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை அ.இ.அ.தி.மு.க.வினர் சிறப்பான முறையில் செய்திருந்தனர். முகாமை அமைச்சர் திரு. தோப்பு N.D. வெங்கடாசலம் தொடங்கிவைத்தார். 10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள், பொறியாளர்கள் என 6 ஆயிரத்து 800 பேர் வேலைக்காக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு அமைச்சர்கள் திரு. எடப்பாடி கே.பழனிசாமி, திரு. தோப்பு N.D. வெங்கடாசலம் ஆகியோர் பணிநியமன ஆணைகளை வழங்கினர். இந்த முகாம் நடத்தி வேலைவாய்ப்பு வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பணிநியமன ஆணைகளை பெற்றுக்கொண்டவர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.