உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழகம் முதலிடம் ; முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி பாராட்டு

உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழகம் முதலிடம் ; முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அப்பலோ மருத்துவமனை தலைவர்   பிரதாப் சி ரெட்டி பாராட்டு

சனி, நவம்பர் 26,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் நல்வாழ்வுக்காக மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளால், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழகம் நாட்டையே உலகின் முதல் இடத்திற்கு உயர்த்தியுள்ளதாக அப்பலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உடலுறுப்பு தான விழிப்புணர்வு வாரத்தையொட்டி, சென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய அளவில் உடலுறுப்பு தானம் அளிக்கும் விகிதம் 10 லட்சம் பேருக்கு பூஜ்ஜியம் புள்ளி ஆறு என்ற அளவில் உள்ள நிலையில், தமிழகத்தில் உறுப்பு தானம் அளிப்பவர்கள் விகிதம் 10 லட்சம் பேருக்கு ஒன்று புள்ளி எட்டு என்ற அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பேசிய அப்பலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் நல்வாழ்வுக்காக மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளால், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழகம் நாட்டையே உலகின் முதல் இடத்திற்கு உயர்த்தியுள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

உறுப்புதான விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் C. விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.