உடல்நலனையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக பணியாற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய நடிகர் சங்கம் வாழ்த்து

உடல்நலனையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக பணியாற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய நடிகர் சங்கம் வாழ்த்து

வியாழன் , செப்டம்பர் 29,2016,

உடல்நலனையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக பணியாற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய நடிகர் சங்க உறுப்பினர்கள் பிரார்த்திப்பதாக நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ் மக்களுக்காக, தமிழர்களின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்து பயணிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் உடல்நலனையும் பொருட்படுத்தாமல் மக்கள் பணியாற்றும் உங்களை நோக்கி எங்களின் கரங்களை குவிக்கிறோம். விரைவில் பூரண குணமடைந்து வரும் நாளுக்காக தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் பிரார்த்திகிறோம்” என்று நடிகர் சங்கம் சார்பில் நாசர் தெரிவித்துள்ளார்.