உற்சாகத்தில் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள்:முதலமைச்சர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட இன்றும் ஆயிரக்கணக்கானோர் மனு

உற்சாகத்தில் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள்:முதலமைச்சர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட இன்றும் ஆயிரக்கணக்கானோர் மனு

வியாழக்கிழமை, பிப்ரவரி 04, 2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அ.இ.அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனுக்கள் தொடர்ந்து இன்றும் தலைமைக்கழகத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தொண்டர்களின் எழுச்சியை போற்றும் விதமாக நேற்று நிறைவடைந்த விண்ணப்ப விநியோகத்தை இன்றுமுதல் 3 தினங்களுக்கு நீட்டித்து, முதலமைச்சரும், கழகப் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், தொண்டர்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அ.இ.அ.தி.மு.க.வினருக்கான விருப்பமனு விநியோகம் முதலமைச்சரும் கழக பொதுச்செயலாளருமான செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி கடந்த மாதம் 20 -ம் தேதி தொடங்கியது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் தலைமைகழகத்திற்கு வருகைதந்து முதலமைச்சர் ஜெயலலிதா, தங்கள் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில் நேற்று நிறைவுபெறுவதாக இருந்த விண்ணப்ப விநியோகத்தை இன்று முதல் மூன்று நாட்களுக்கு நீட்டித்து முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன்படி இன்றும் தலைமைகழகத்தில் விருப்ப மனு விநியோகம் நடைபெற்று வருகிறது. ஏராளமான தொண்டர்கள், முதலமைச்சர் தங்கள் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்களை அளித்து வருகின்றனர்.