உலக மகளிர் தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் அவ்வையார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை

உலக மகளிர் தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் அவ்வையார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை

வியாழக்கிழமை, மார்ச் 09, 2017,

சென்னை : உலக மகளிர் தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் சென்னையில் நேற்று  அவ்வையார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

உலக மகளிர் தினத்தையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ் மூதாட்டி அவ்வையாரின் திருவுருவச் சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் .D.ஜெயக்குமார்,  வி.சரோஜா,  பெஞ்சமின்,  நிலோஃபர் கபில், சேவூர் எஸ். ராமச்சந்திரன், எஸ்.வளர்மதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.