ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.273.44 கோடி மதீப்பீட்டில் கட்டடங்கள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.273.44 கோடி மதீப்பீட்டில் கட்டடங்கள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ஞாயிறு, பெப்ரவரி 28,2016,

ரூ 273 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சித் துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதார வசதிகள்,சாலை வசதிகள் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், ஊரகப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துதல், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பழுதடைந்த ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களுக்குப் புதிய கட்டடங்கள் கட்டுதல் போன்றபல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் – அருப்புக்கோட்டையில் 17,000 சதுர அடிகட்டட பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், கூட்டரங்கம், பயிற்சிக் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் 1 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள்; நீலகிரி மாவட்டம் – ஊட்டியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அலுவலகக் கட்டடம்; கடலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 41 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்; அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 49 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 87 ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தில்பயிற்சி பெறும் அலுவலர்கள் தங்குவதற்கு ஏதுவாக, ஓய்வு அரங்கம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடற்பயிற்சி அரங்கம், யோகா அரங்கம், இணையதள வசதியுடன் கூடியகணினி அறை ஆகிய வசதிகளுடன் 11 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயிற்சியாளர்கள் தங்கும் விடுதி; அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாகப்பட்டினம்,நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, திருப்பூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 35 வட்டார ஊராட்சி சேவை மையங்கள்; அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம்,கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 105 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 762 கிராம ஊராட்சி சேவை மையங்கள்; கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தேனி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 38 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 31 பாலங்கள்;

கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 13 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 பேருந்து நிலையங்கள்; அரியலூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிக் கட்டடங்கள்; இராமநாதபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை, மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் 1 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 சமுதாயக்கூடங்கள்;

காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினம் ஆகியமாவட்டங்களில் 2 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன்விற்பனைக் கூடங்கள், மீன் வலைப் பின்னல் கூடங்கள், மீன் ஏலம் விடும் அரங்கம் மற்றும் மீன் கொள்முதல் மையம்; அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகியமாவட்டங்களில் 32 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள302 அங்கன்வாடி கட்டடங்கள், 44 தானியக் கிடங்குகள், 6 பொது விநியோகக் கடைகள், 2 சுகாதார மையங்கள், 3 ஆண்கள் சுகாதார வளாகங்கள், 2 பயிற்சிக் கூடங்கள்,2 விளையாட்டு மைதானங்கள், 4 சமையல் கூடங்கள், 3 நாடக மேடைகள், 2 பேரிடர் மேலாண்மை கட்டடங்கள், 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 3 ஊராட்சிக் கூட்டமைப்பு கட்டடங்கள்; என மொத்தம் 273 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சித் துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.