ஊழலும் – ஊழலும் கை கோர்த்துள்ளது:திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து எச்.ராஜா கருத்து

ஊழலும் – ஊழலும் கை கோர்த்துள்ளது:திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து எச்.ராஜா கருத்து

செவ்வாய், பெப்ரவரி 16,2016,

திமுக – காங்கிரசும் கூட்டணி அமைத்தன் மூலம், ஊழலும் – ஊழலும் கை கோர்த்திருப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி சட்டமன்ற தொகுதி பாஜக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான செயல்பாடுகள் குறித்தும் கட்சியினருக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, திமுக – காங்கிரஸ் கூட்டணியால், ஊழலும் – ஊழலும் கை கோர்த்திருப்பதாக தெரிவித்தார்.