ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்:கட்சி மாநாட்டில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா உளரல்

ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்:கட்சி மாநாட்டில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா உளரல்

திங்கள் , பெப்ரவரி 22,2016,

லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விஜயகாந்த் கட்சி மாநாட்டில் அவரது மனைவி உளறிக்கொட்டியது அனைத்து தரப்பு மக்களையும் நகைப்புக்குள்ளாக்கியுள்ளது. ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அவரது பேச்சுக்கு, தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. 

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விஜயகாந்த் கட்சியின் மாநாட்டில் அவரது மனைவி பிரேமலதாவும், தனது கணவரைப்போலவே முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, உளறிக்கொட்டி, அக்கட்சியனரை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தினார். ஒரு கட்டத்தில் பிரேமலதா பேசும்போது, லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்ததால், பலரும் அதிர்ச்சி அடைந்தனர். 

தமிழகத்தில் நியாயமான, நேர்மையான ஆட்சி நடைபெறுவதை விஜயகாந்த் மனைவி பிரேமலதா ஒப்புக்கொண்டதோடு மட்டுமின்றி, அப்படிப்பட்ட ஒரு ஆட்சியை தொடரவிடாமல், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பேசியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஊழலை விஜயகாந்த் கட்சி ஆதரிக்கிறது என்பதை பிரேமலதாவின் பேச்சு உணர்த்துகிறது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

முதலமைச்சர்  ஜெயலலிதா குறித்து, விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அவதூறாக பேசியதற்கும் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.