ஊழல் பணத்தில் திமுகவினர் கட்சி நடத்தி வருகின்றனர்: பரிதி இளம்வழுதி குற்றச்சாட்டு

ஊழல் பணத்தில் திமுகவினர் கட்சி நடத்தி வருகின்றனர்: பரிதி இளம்வழுதி குற்றச்சாட்டு

புதன்கிழமை, ஏப்ரல் 20, 2016,

ஊழல் பணத்தில் தான், திமுகவினர் கட்சி நடத்தி வருவதாக, அதிமுக சார்பில் எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார்.

எழும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பரிதி இளம்வழுதி, அத்தொகுதிக்குட்பட்ட புளிந்தோப்பு பகுதியில் இன்று வாக்கு சேரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை வெள்ளத்தின்போது, அதிமுக அரசு மேற்கொண்ட பணிகள் காரணமாக, தனது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திமுக தலைமை அராஜகமான முறையில் செயல்படுவதாகவும், ஊழல் செய்த பணத்தில் தான், கட்சியை நடத்தி வருவதாகவும் பரிதி இளம்வழுதி குற்றம் சாட்டினார். 

இதே போன்று திருவிக நகர் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நீலகண்டன், பெரியார் நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தொகுதியில் முக்கிய பிரச்சனையான ஆடு தொட்டி பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.