எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரம்:மக்கள் மத்தியில் எடுபடாது பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா உறுதி

எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரம்:மக்கள் மத்தியில் எடுபடாது பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா உறுதி

November-17;2015

சென்னை: வாக்குகளை கவர்வதற்காக எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் தவறான பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா மக்கள் மத்தியில் பேசினார். தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்குஉட்பட்ட புது வண்ணாரப் பேட்டையிலுள்ள வீரராகவன் தெரு, தண்டையார்பேட்டையிலுள்ள எல்லைய முதலி தெரு, சேணியம்மன் கோவில் தெரு,எண்ணூர் ஹை ரோடு, கொருக்குப்பேட்டையிலுள்ள ஜெ ஜெ நகர்,சுண்ணாம்புக் கால்வாய், திருவள்ளூர் நகர், கொடுங்கையூரிலுள்ள எழில் நகர்,பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட முத்தமிழ் நகர், கொளத்தூர் தொகுதிக்குட்பட்டஇரட்டை ஏரி ஜங்ஷன் பகுதி மற்றும் மாதவரம், அம்பத்தூர், வில்லிவாக்கம்,அண்ணாநகர் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதிகளுக்குட்பட்டவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். சம்பந்தப்பட்டஅதிகாரிகளை உடன் அழைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டஇடங்களிலிருந்து தண்ணீரை உடனடியாக வெளியேற்றவும், தேவையானஅனைத்து நிவாரண உதவிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாகபோர்க்கால அடிப்படையில் வழங்கவும் ஆணையிட்டார்.

வடகிழக்கு பருவமழைக் காலம் என்பது அக்டோபர், நவம்பர்,டிசம்பர் ஆகிய 3 மாதங்களை உள்ளடக்கியது. இந்த வடகிழக்கு பருவமழைகாலம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை, ஒரு சில நாட்களிலேயே கொட்டித்தீர்த்துவிட்டது. இப்படி மூன்று மாத காலத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒருசில நாட்களிலேயே கொட்டித் தீர்த்து விட்டால், என்ன தான்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், ஒரு சிலஇடங்களில் மழை நீர் தேங்குவதையும், அதனால் சேதங்கள் விளைவதையும்தவிர்க்க இயலாது. இப்படி மழை நீர் தேங்கியுள்ளது, பல மக்கள்பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைஅறிந்தவுடன், அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டது. அமைச்சர்களும், அரசுஅதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும், தீயணைப்புத் துறைஅதிகாரிகளும், அனைத்து துறை அதிகாரிகளும், மக்களுக்கு நிவாரணம்அளிக்கும் பணிகளில் தீவிரமாக இரவு பகல் பாராமல் போர்க் காலஅடிப்படையில் இங்கு ஈடுபட்டிருக்கிறார்கள். இதோ இந்த பள்ளிக்கூடத்தில்இந்த தொகுதியைச் சார்ந்த, பாதிக்கப்பட்ட 162 குடும்பங்கள் இங்கே தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இன்று மட்டும் 20,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. தினந்தோறும் தேவைப்படும் மக்களுக்கு சமைத்தஉணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகுதியில் 7 மருத்துவமுகாம்கள்துவங்கப்பட்டுள்ளன. இங்கே இந்த பள்ளிக்கூடத்திலேயே ஒரு மருத்துவமுகாம் செயல்பட்டு வருகிறது. அதிகாரிகள் இரவு பகல் என்று பாராமல்அமைச்சர்களுடன் இணைந்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில்ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த தொகுதியில் மட்டும் தேங்கிய மழை நீரைவெளியேற்றுவதற்காக 48 பெரிய மோட்டார் பம்பு இயந்திரங்கள்பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 6 மிகப் பெரிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உங்களுக்கு விரைவில் சகஜநிலை திரும்ப என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமோ,அத்தனையும் மேற்கொண்டு வருகிறோம். ஆகவே,மக்கள்கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு துணையாக நான் இருக்கிறேன்,தமிழக அரசு இருக்கிறது என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொண்டு, உங்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல், விரைவில் சகஜ நிலை திரும்புவதற்குஎன்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அத்தனையும்தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது என்பதைதெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மழை நீர், கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை சிலர் அரசியல் ஆக்கப் பார்க்கிறார்கள். சில எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தேர்தல் நேரத்தில் எப்படியாவது உங்கள் வாக்குகளை கவர்ந்து விட வேண்டும் என்பதற்காக உண்மைக்கு மாறான தகவல்களை உங்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள். ஆனால், இது எல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது என்பதை நான் அறிவேன். இந்த மூன்று தொகுதிகளைச் சார்ந்த பொது மக்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு ஆதரவாக, துணையாக நான் இருக்கிறேன். தமிழக அரசும் இருக்கிறது. உங்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை செய்து வருகிறோம். விரைவில் இங்கே சகஜ நிலை திரும்பும். தமிழக அரசே தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.