எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

ஞாயிறு, பெப்ரவரி 21,2016,

கடந்த 5 ஆண்டுகால அதிமுக அரசின் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நிறைவு பெற்றதையொட்டி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்தார்.

கடைசி நாளான இன்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110-ன் கீழ் அறிக்கை அளித்த அவர், ‘‘இந்த 14-வது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் முதல்வர் என்ற முறையில் இணைந்து பணியாற்றியதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பல நேரங்களில் விவாதங்கள் காரசாரமாக இருந்தாலும், காழ்ப்புணர்ச்சி இல்லாமல் செயல்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப்பேரவை என்பது மக்களாட்சியின் மகத்துவம். அனைத்து மக்களுக்கும் நன்மை செய்ய நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பு இது. பேரவையில் நடுநிலை தவறாது பணியாற்றிய பேரவைத் தலைவர் பி.தனபால், பேரவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எனது பாராட்டுதல்களை தெரிவத்துக் கொள்கிறேன்’’ என்றார்.