எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ; எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தீபா மலர்வளையம் வைத்து மரியாதை

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ; எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தீபா மலர்வளையம் வைத்து மரியாதை

செவ்வாய், ஜனவரி 17,2017,

சென்னை ; மறைந்த முதல்வர்  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவு இல்லம் மற்றும் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தீபா, அதன் பின்னர், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.