எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடு : பிரதமர் நரேந்திரமோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடு : பிரதமர் நரேந்திரமோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி

ஜூலை ,26 ,2017 ,புதன்கிழமை, 

சென்னை : எம்.ஜி.ஆரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட முடிவு செய்ததற்காக பிரதமர் நரேந்திரமோடிக்கு  ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) பொருளாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட வேண்டும் என்று, நான் முதல்–அமைச்சராக பொறுப்பேற்றிருந்த பொழுது, கடந்த 05.01.2017 அன்று மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன்.எனது வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில், அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, மத்திய நிதி அமைச்சகம் கடந்த 17.7.2017 அன்று ஒப்புதல் கடிதம் எனக்கு அனுப்பியிருக்கிறது.
தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் எம்.ஜி.ஆரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட முடிவு செய்ததற்காக பிரதமர் நரேந்திரமோடிக்கும், அவரது தலைமையிலான மத்திய அரசுக்கும், தமிழக மக்களின் சார்பாகவும், விசுவாசமிக்க ஒன்றரைக் கோடித் தொண்டர்களின் சார்பாகவும் எனது மனம் நிறைந்த மகிழ்ச்சியையும், கோடான கோடி நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.