எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க அம்மா அணியில் இணைந்தார்

எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க அம்மா அணியில் இணைந்தார்

ஜூலை ,23 ,2017 ,ஞாயிற்றுக்கிழமை,

சேலம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சேலத்தில் சந்தித்து, அ.தி.மு.க அம்மா அணியில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி ஆறுக்குட்டி   எம்.எல்.ஏ இணைந்தார்.

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏவாக ஆறுக்குட்டி உள்ளார்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவில் , முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியில் முதல்நபராக ஆறுக்குட்டி எம்.எல்.ஏ இணைந்தார்.
இணைந்தார்

இந்நிலையில், சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் நேற்று காலை ஆறுக்குட்டி எம்.எல்.ஏ நேரில் சந்தித்து பேசி, அ.தி.மு.க அம்மா அணியில் இணைந்தார். அப்போது, மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஒருமுறை தொலைபேசியில் பேசிவிட்டால், பிரச்சினை முடிவுக்கு வந்து விடும் என்று கூறினார். அதற்கான முயற்சியை தான் மேற்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.