எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ. பன்னீர் செல்வம்

எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ. பன்னீர் செல்வம்

ஜூன்,21 , 2017 ,புதன்கிழமை,

தஞ்சாவூர் : எம்.எல்.ஏ.,க்கள் பேரம் விவகாரத்தில் உரிய நடவடிக்கை தேவை என முன்னாள் முதல்வர் ஓ .பன்னீர் செல்வம் கூறினார்.

நேற்று தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்,கூவத்தூரில்  ‘‘எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிகலாவுடனான சந்திப்பை தம்பிதுரை தெளிவுப்படுத்த வேண்டும்’’ என்றார்