எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு.எம்.ஜி.ஆரின் சிலைக்கு,புரட்சித்தலைவி முதலமைச்சர் ஜெயலலிதா மாலை அணிவித்து பிறந்தநாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார்

எம்.ஜி.ஆரின்  பிறந்தநாளை முன்னிட்டு.எம்.ஜி.ஆரின் சிலைக்கு,புரட்சித்தலைவி முதலமைச்சர் ஜெயலலிதா  மாலை அணிவித்து பிறந்தநாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார்

ஞாயிறு, ஜனவரி 17,2016,

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு, கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, எம்ஜிஆரின் 99 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார். முதல் தொகுப்பினை கழக இலக்கிய அணிச் செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சருமான பா.வளர்மதி, இரண்டாம் தொகுப்பினை கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினரும், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் முதல்வர் அங்கு திரண்டிருந்த கழக நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிககள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.