எம்.ஜி.ஆர். நினைவுநாள்:தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து அ.இ.அ.தி.மு.க.வினர் அஞ்சலி

எம்.ஜி.ஆர். நினைவுநாள்:தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து அ.இ.அ.தி.மு.க.வினர் அஞ்சலி

வியாழன் , டிசம்பர் 24,2015,

அ.இ.அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், பாரத் ரத்னா, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 28-வது ஆண்டு நினைவுதினத்தை யொட்டி, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கும், திருவுருவப் படங்களுக்கும் மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கூட்டுச் சாலையில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு, அமைச்சர் திரு. முக்கூர் N. சுப்பிரமணியன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கீழ்பெண்ணாத்தூர் பேருந்து நிலையம் முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு, அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். அணி சார்பில், திருமங்கலத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, மாதவரம், தேரடி, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைகள் மற்றும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படங்களுக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடி, வாலாஜாபேட்டை, காவேரிபாக்கம் பகுதிகளில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைகள் மற்றும் திருவுருவப் படங்களுக்கு அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், வடசேரி சந்திப்பில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு, கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பாரத் ரத்னா எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கழக நிர்வாகிகள், துணை மேயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், குன்றத்தூர், சோழிங்கநல்லூர், திருப்போரூர், படப்பை ஆகிய இடங்களில் டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைகள் மற்றும் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின், திருவுருவச் சிலைக்கு, அ.இ.அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேயர் திருமதி மல்லிகா பரமசிவம் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் நகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க.வினர், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரியப்பா நகரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு, கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பழனி பேருந்து நிலையம் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் மணிக்கூண்டில் இருந்து பேரணியாகச் சென்ற அ.இ.அ.தி.மு.க.வினர், பேருந்து நிலையம் அருகேயுள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையம், தேனி, ஆண்டிப்பட்டி, போடி, சின்னமனூர், கம்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைகள் மற்றும் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராமநாதபுரம், மத்தியக் கொடிமரம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, டானிங்டனில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு, அ.இ.அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.இ.அ.தி.மு.வினர் பேரணியாகச் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகராட்சிப் பள்ளியில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், முசிறி, மணப்பாறை, துறையூர், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கும், திருவுருவப் படங்களுக்கும் மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அரியலூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு, அ.இ.அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் பேரணியாகச் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு அ.இ.அ.தி.மு.க.வினர் மவுன அஞ்சலி செலுத்தினர்.

நெல்லை கொக்கிரக்குளம் பகுதியில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேயர் திருமதி புவனேஸ்வரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை யொட்டி, மதுரை திருப்பரங்குன்றம், தெற்குவாசல், கோரிபள்ளம், திருமங்கலம், மேலூர் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

கோவை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு, கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நாமக்கல் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் மோகனூர், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படங்கள் மற்றும் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தஞ்சை ரயில் நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேயர் திருமதி சாவித்திரி கோபால் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சிவகங்கை மாவட்டம் அரண்மனை வாசல் அருகேயுள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு, கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதேபோன்று, டெல்லியில் உள்ள அ.இ.அ.தி.மு.க. அலுவலகத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலை மற்றும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. அன்வர்ராஜா, திரு. ஏ.கே. செல்வராஜ் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.