எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்து ,முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்து ,முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை

ஜூன் , 28 ,2017 , புதன்கிழமை,

சென்னை : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை நடக்கிறது.

தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் கூடுகிறது. அமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு அம்சங்கள் பற்றியும், விழாவுக்கான முன்னேற்பாடுகள் பற்றியும் இந்தக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.