எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : வரும் 17-ஆம் தேதி பொது விடுமுறை

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : வரும் 17-ஆம் தேதி பொது விடுமுறை

வியாழன்,ஜனவரி 12,2017,

எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த தினமான ஜனவரி 17-ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை விட தமிழக அரசு முடி வெடுத்துள்ளதால், அதற் கான அறிவிப்பு நாளை  வெளியாகலாம் என தெரிகிறது.

அதிமுகவின் நிறுவன ரும், மறைந்த முன் னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 100-வது பிறந்த தினம் வரும் 17-ம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அதிமுக சார்பில் இந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாட, அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அறிவுறுத்தியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தற்போது கட்சியினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு தினத்தில் (ஜனவரி 17) பொது விடுமுறை விட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக, தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது:

எம்ஜிஆர் நூற்றாண்டு தினத்தன்று பொது விடுமுறை விட அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான கோப்புகள் பொதுத்துறையால் கடந்த சில தினங்களுக்கு முன்னரே தயாரிக்கப்பட்டு, முதல்வரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அவர் ஆந்திரம் சென்றுள்ளதால் விரைவில் அறிவிப்பு வெளியாகும். பொது விடுமுறை என்பது சம்பளத்துடன் கூடியதாக இருக்கும். சிறப்பு நிகழ்வாக இந்த விடுமுறை அறிவிக்கப்படும். ஏற்கெனவே அண்ணா நூற்றாண்டை ஒட்டி இதுபோல் பொது விடுமுறை விடப்பட்டது.

இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.