எம்.ஜி.ஆர்.பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டங்கள் நடத்தி சிறப்பாக கொண்டாட கழகத் தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

எம்.ஜி.ஆர்.பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டங்கள் நடத்தி சிறப்பாக கொண்டாட கழகத் தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

செவ்வாய், ஜனவரி 12,2016,

அ.இ.அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 99-வது பிறந்த நாள் விழா – வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தி சிறப்பாக கொண்டாட முதலமைச்சர் ஜெயலலிதா, கழகத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:

அதிமுக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆரின் 99-ஆவதுபிறந்த நாளை முன்னிட்டு, 17.1.2016 ஞாயிற்றுக் கிழமை முதல் 19.1.2016 செவ்வாய்க் கிழமைவரை மூன்று நாட்கள் ` எம்.ஜி.ஆரின் 99-ஆவதுபிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’ கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும்; கழக அமைப்புகள்செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லிமற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில்கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள். \2 மாவட்டக் கழகச்செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்தில்அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதாபேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம்,வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு,மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை,இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறுஅமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவுசங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக்குழுவினருடன் தொடர்புகொண்டு பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி,அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா,ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும்,17.1.2016 அன்று ஆங்காங்கே எம்.ஜி.ஆர்ச் சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறகேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.