ஏழைப் பெண்களுக்கு, மானிய உதவியுடன் நவீன ரக தையல் இயந்திரங்கள்:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் மனமார்ந்த நன்றி

ஏழைப் பெண்களுக்கு, மானிய உதவியுடன் நவீன ரக தையல் இயந்திரங்கள்:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் மனமார்ந்த நன்றி

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 05, 2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ஏழை-எளிய பெண்களுக்கு, மானிய உதவியுடன் நவீன ரக தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டதால், பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை எளிய பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, தமிழகம் முழுவதும் மகளிர் தையல் சங்கங்கள் உருவாக்கப்பட்டு, அதன் உறுப்பினர்களுக்கு மானிய உதவியுடன் தாட்கோ, டாப்செட்கோ மற்றும் டாம்கோ நிறுவனங்களின் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, நாகை மாவட்டத்தில் 930 நவீன ரக தையல் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 620 இயந்திரங்கள் மகளிர் தையல் கூட்டுறவு சங்க பெண்களுக்கு வழங்கப்பட்டன.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சீருடைகள் தைக்கும் பணியில் இப்பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தையல் இயந்திரம் பெற்ற பெண்கள், பொருளாதார ரீதியாக முன்னேறி வருகின்றனர். தங்களது வாழ்வாதாரம் சிறக்க வழிவகை செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.