ஏழை, எளிய,மக்கள் பயன்பெறும் வகையில், சிறிய தெருக்களில் பயணிக்கும் வகையில் சிற்றுந்துகள் : முதலமைச்சருக்கு பொது மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

ஏழை, எளிய,மக்கள் பயன்பெறும் வகையில், சிறிய தெருக்களில் பயணிக்கும் வகையில் சிற்றுந்துகள் : முதலமைச்சருக்கு பொது மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

ஞாயிறு, மார்ச் 06,2016,

சென்னை மாநகரின் குறுகலான தெருக்களில் வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சிற்றுந்துகளை இயக்கி வைத்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். முக்கிய சாலை சந்திப்புகளுக்குச் சென்று, பேருந்து சேவையை பயன்படுத்தி வந்த, ஏழை-எளிய மக்களுக்கு, சிற்றுந்து சேவைகள் மிகுந்து வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. இதனால், முதலமைச்சருக்கு அவர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்கள் நலன்கருதி, முதலமைச்சர் செல்வி. ஜெ ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். சென்னை மாநகரின் குறுகலான தெருக்களில் பேருந்துகள் செல்ல முடியாத நிலை இருப்பதைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் மக்களின் வசதிக்காக, முதற்கட்டமாக 50 சிற்றுந்துகளை இயக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டு, அவற்றின் இயக்கத்தை கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, சிற்றுந்துகள் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரத்து 510 வழித்தடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 70 சிற்றுந்து வழித்தடங்களும் அடங்கும். மொத்தம் 165 சிற்றுந்துகள் வெற்றிகரமாக இயக்கப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.