ஏழை-எளியோருக்கு உணவுப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கான நேரடி மானியத்தை, மாநில அரசுகளின் மூலமாக, மத்திய அரசு வழங்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தல்

ஏழை-எளியோருக்கு உணவுப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கான நேரடி மானியத்தை, மாநில அரசுகளின் மூலமாக, மத்திய அரசு வழங்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தல்

ஞாயிறு, மார்ச் 13,2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஏற்கெனவே வலியுறுத்தியபடி, ஏழை-எளியோருக்கு உணவுப்பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கான நேரடி மானியத்தை, மாநில அரசுகளின் மூலமாக, மத்திய அரசு வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று, ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டு மானியம் வழங்கும் சட்ட மசோதாவின் மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளபடி, உணவுப்பொருள் மற்றும் விவசாயிகளுக்கான மானியத்தை மாநில அரசுகள் மூலம்தான் மத்திய அரசு வழங்க வேண்டும் என அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திரு. செங்குட்டுவன் வலியுறுத்தினார்.

ஏழை-எளிய மக்கள், மானியமில்லா மண்ணெண்ணெயை விலை கொடுத்து வாங்க இயலாத நிலையில் இருப்பதால், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மத்திய அரசிடம் ஏற்கெனவே முறையிட்டுள்ளபடி தற்போதைய முறையிலேயே மாநிலங்களுக்குமண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என மற்றொரு அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திரு. பரசுராமன் வலியுறுத்தினார்.