கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, நடைபெற்று வரும் சீரமைப்பு – நிவாரணப் பணிகளால் – இயல்பு நிலை திரும்பியது:கடலூர் மக்கள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி,  நடைபெற்று வரும் சீரமைப்பு – நிவாரணப் பணிகளால் – இயல்பு நிலை திரும்பியது:கடலூர் மக்கள் மகிழ்ச்சி

வெள்ளி, டிசம்பர் 11,2015,

கனமழையினால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு- நிவாரணப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டதால், அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. முதலமைச்சரின் நடவடிக்கைக்கு, கடலூர் மக்கள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பெய்த கனமழையினால், பாதிக்கப்பட்ட கடலூரில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, அமைச்சர்கள், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட அரசின் பல்வேறுத்துறையினர் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கனமழையினால் பள்ளிப் பாடப்புத்தகங்களை இழந்த, மாணவ-மாணவிகளுக்கு, விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், வண்ணப் பென்சில்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு மழைகால தொற்றுநோய் பரவமால் தடுக்க, மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டதுடன், குளோரின் கலந்து குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழையினால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்கள், போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டால், மாவட்டத்தில் மின் தட்டுபாடு முழுவதும் நீக்கப்பட்டு, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றன.

சிதம்பரம், கிள்ளை ஆகிய பகுதிகளில், ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டால், விளை நிலங்கள் பாதுகாக்கப்பட்டன.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, வெளிமாவட்டங்களிலிருந்து கூடுதலாக வரவழைக்கப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விசூர், பெரியக்காட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், சீரமைப்புப் பணிகள் முடிவுற்றதால், அங்கு இயல்பு நிலைதிரும்பியுள்ளது.

கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வாக்களார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் வழங்க கடலூர் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் திரு. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இயற்கையின் பிடியில் சிக்கிய கடலூர் மாவட்டத்தில், மழை பெய்த சுவடுகள் தெரியாத அளவிற்கு, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், அம்மாவட்டத்தில், மீண்டும் இயல்புநிலை திரும்பியுள்ளது. கனமழையின் பாதிப்பிலிருந்து, கடலூர் மக்களை காப்பற்ற முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு கடலூர் மக்கள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.