கட்சி நடத்தவே தகுதி இல்லாத விஜயகாந்துடன் கூட்டணிக்காக கெஞ்சுகிறது திமுக:அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு

கட்சி நடத்தவே தகுதி இல்லாத விஜயகாந்துடன் கூட்டணிக்காக கெஞ்சுகிறது திமுக:அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு

திங்கள் , பெப்ரவரி 08,2016,

கூட்டணிக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் கெஞ்ச வேண்டிய நிலையில்தான் திமுக உள்ளதாக அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சனம் செய்துள்ளார்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அரசியல் கட்சி நடத்துவதற்கு தகுதியே இல்லாத விஜயகாந்திடம் கெஞ்சுகின்ற நிலையில் தி.மு.க. உள்ளது என்றும்  மக்கள் ஒருபோதும் தி.மு.க கவை ஏற்றுக் கொள்வதாக இல்லை என்றும் கூறினார்.

திமுக என்பது ஒரு மூழ்கும் கப்பல் என்றும் அதில் யாரும் பயணிக்க விரும்பவில்லை என்றும் விமர்சனம் செய்தார்.  மேலும் தி.மு.க தமிழர்களுக்கு எதிராக அதிக துரோகங்களை செய்துள்ளது என்று குற்றம் சாட்டிய நத்தம் விஸ்வநாதன் முல்லை பெரியாறு காவிரி பிரச்சனையில் தமிழர்களுக்கு கருணாநிதி துரோகம் இழைத்து விட்டதாகவும் குறிப்பிட்டார்