கனிமொழி எம்.பி. பதவிக்காகச் பிச்சை எடுத்தார்கள் : திமுக மீது மு.க.அழகிரி கடும் தாக்கு!

கனிமொழி எம்.பி. பதவிக்காகச் பிச்சை எடுத்தார்கள் : திமுக மீது மு.க.அழகிரி கடும் தாக்கு!

திங்கள் , பெப்ரவரி 15,2016,

திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கொள்கை இல்லை என்று கூறிய மு.க.அழகிரி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது என்று தெரிவித்தார்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

திமுக-காங்கிரஸ் இரண்டிற்குமே கொள்கை இல்லை. காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்தோம், அமைச்சரவையில் இருந்தோம், அதன் பிறகு காங்கிரஸை விட்டு விலகினோம், திமுக விலகியது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியை திமுக நன்றி கெட்டவர்கள் என்றனர்.

நன்றி கெட்டவர்கள் என்று கூறிவிட்டு பிறகு கனிமொழி எம்.பி. பதவிக்காகச் சென்று பிச்சை எடுத்தார்கள். மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி என்கிறார்கள். அதனால்தான் இரண்டு கட்சிகளுக்குமே கொள்கையே இல்லை என்கிறேன்.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெறாது என்பது என்னுடைய கருத்து இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.