கன்னியாகுமரி மாவட்டத்தில், அரசு மானியத்துடன் நவீன களை எடுக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன: விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

கன்னியாகுமரி மாவட்டத்தில், அரசு மானியத்துடன் நவீன களை எடுக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன: விவசாயிகள் முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு நன்றி

திங்கள் , நவம்பர் 30,2015,

கன்னியாகுமரி மாவட்டத்தில், தோட்டப் பயிர் விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் நவீன களை எடுக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, வேளாண்மையில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், விவசாயிகளுக்குத் தேவையான நவீன கருவிகள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார். இதனால், குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை பெறும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நெல், வாழை, தென்னை விவசாயத்தைப் போன்றே மலையும், மலை சார்ந்த பகுதிகளில் பயிர் செய்யப்படும் தோட்டக்கலை விவசாயமும் மேம்பாடு அடைய மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தோட்டக்கலை விவசாயிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் அரசு மானியத்துடன், நவீன களை எடுக்கும் இயந்திரங்கள், 5 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதன்மூலம் பயனடைந்த விவசாயிகள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.