முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

சனி, மார்ச் 05,2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பல்வேறு நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்வி கற்கும் பெண்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள், கல்வி உபகரணங்கள், விலையில்லா மடிக்கணினிகள் போன்றவை வழங்கப்பட்டன. வறுமை காரணமாக மணமுடிக்க முடியாமல் உள்ள பெண்களுக்கு தாயுள்ளத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கம், 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி மற்றும் பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. மணமுடித்து கருவுற்ற தாய்மார்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு தாய்வீட்டு சீதனமாக சீர்வரிசைப்பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் பலவகையான கலவை சாதங்களும் வழங்கப்பட்டன. வளைகாப்பு பொருட்களை பெற்றுக்கொண்ட பெண்கள் முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.