தி.மு.க விருப்ப மனு,கம்பி நீட்டும் நிர்வாகிகள்:வெறிச்சோடிய அறிவாலயம்

தி.மு.க  விருப்ப மனு,கம்பி நீட்டும் நிர்வாகிகள்:வெறிச்சோடிய அறிவாலயம்

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 05, 2016,

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுகவில் விருப்ப மனுக்கள் பெறுவது ஏற்கனவே தொடங்கி விட்டது. இந்த நிலையில் திமுகவிலும் விருப்ப மனுக்கள் பெறுவது தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களைத் தரலாம் என திமுக தலைமை அறிவித்துள்ளது. பொதுத் தொகுதிகளுக்கு ரூ. 25,000 கட்டணம் செலுத்தும், தனித் தொகுதிகளுக்கு ரூ. 15,000 கட்டியும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு இரு வகை தொகுதிகளுக்கும் கட்டணம் ரூ. 15,000தான். விண்ணப்ப படிவத்திற்குத் தனியாக ரூ. 1000 கட்ட வேண்டும்.
முதல் நாள் பரப்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் இரண்டாம் நாள் முதல் தாக்கல் செய்ய குறைவான நிர்வாகிகளே வந்திருந்ததால் அறிவாலயம் வெருச்கோடி காணப்படுகிறது. தி.மு.க கூட்டணி அமைப்பதில் உறுதியாக உள்ளதால். எங்கே, நம் தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு போய் விடுமோ என்ற பீதியிலும், அதிமுக வை விட கட்டணம் இரு மடங்கு அதிகமாக உள்ள காரணத்தினாலும் திமுக நிர்வாகிகள் கம்பி நீட்டுவதாக அரசியல் வட்டரங்கள் கிசுகிசுகின்றனர்.