கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து என அனுதாப அலையை தேட திமுக சதித் திட்டம்: நாஞ்சில் சம்பத் குற்றசாட்டு

கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து என அனுதாப அலையை தேட திமுக சதித் திட்டம்: நாஞ்சில் சம்பத் குற்றசாட்டு

செவ்வாய், மே 10,2016,

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரனை ஆதரித்து, செம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே  நாஞ்சி சம்பத் தேர்தல் பிரசாரம் செய்தார்.

 அப்போது பேசிய அவர்  சென்னையில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது திமுக தலைவர் கருணாநிதி தாக்கப்படுவது போலவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது போலவும் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக்கி அனுதாப வாக்குப் பெற, திமுகவினர் திட்டம் தீட்டி உள்ளதாக நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டினார்.