கருணாநிதி அரசியல் கணக்கை, அம்மா முடித்து முடிப்பார்!-வீட்டுவசதி துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேச்சு

கருணாநிதி அரசியல் கணக்கை, அம்மா முடித்து முடிப்பார்!-வீட்டுவசதி துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேச்சு

வியாழன் , பெப்ரவரி 11,2016,

தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், ஆர்.காமராஜ், முக்கூர் என்.சுப்பிரமணியன், எஸ்.பி.சண்முகநாதன், மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 14 அதிமுக நிர்வாகிகளின் இல்லத் திருமணங்களை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை நடத்தி வைத்தார்.

பின்னர் திருமண விழாவில் தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேசும்போது;

அ.தி.மு.க., என்ற பெயரை, எம்.ஜி.ஆர்., அனைத்திந்திய அ.தி.மு.க., என மாற்றியபோது, கருணாநிதி போன்றோர் எள்ளி நகையாடினர். ஆனால் முதல்வர், கடந்த லோக்சபா தேர்தலில், இந்தியாவில், மூன்றாவது பெரிய கட்சியாக, அ.தி.மு.க.,வை வெற்றி பெற வைத்துள்ளார். கருணாநிதியிடம் கணக்கு கேட்டார் எம்.ஜி.ஆர்., அதனால் அ.தி.மு.க., பிறந்தது. வரும் சட்டசபை தேர்தலில், கருணாநிதி அரசியல் கணக்கை, அம்மா முடித்து வைக்க உள்ளார்.
தாயும், தந்தையும் எனக்கு முகம் கொடுத்தனர். தாயாக இருந்து, தந்தையாக இருந்து, தெய்வமாக இருந்து, முதல்வர் எனக்கு முகவரி கொடுத்துள்ளார். அவர் மீதான விசுவாசம் தான், என் சுவாசம். இது என் உயிரின் சாசனம்.இவ்வாறு அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.